• Jan 19 2025

காமராஜர் பிறந்த தினத்தில் வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்துக்கவிதை !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழர்கள் மத்தியில் எளிமை மற்றும் நேர்மைக்கு பெயர் போனவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர்.அவரது 121 வது ஜனன தினம் இன்றாகும்.மக்கள் தலைவர் என போற்றப்பட்ட இவருக்கு முன்னேயும் பின்னேயும் நிகரில்லா ஓர் இடத்தை கொண்டவராக தமிழ் மக்களிடையே அறியப்படுபவர் காமராஜர்.

Kamaraj:The Selfless Leader ...

இன்றைய இவரது பிறந்த தினத்தில் இவருக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மற்றும் தமிழக எழுத்தாளர் வரிசையில் முன்னிடம் பிடிக்கும் கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்துக் கவிதையொன்றை வெளியிட்டிருள்ளார்.


தற்போது வைரலாகி வரும் வைரமுத்துவின் இக் கவிதையில் "கட்டாந் தரையில் கல்விப் பயிர் வளர்த்த நல்லேர் உழவன்" என காமராஜரை விளித்திருக்கும் வைரமுத்து கவிதையின் முடிவில் "காமராஜர் ஆட்சி அமைப்போம் நல்ல முழக்கம்தான் , காமராஜர் ஆவோம் என்பது அதனினும் நல்ல திட்டம் அல்லவா? " என பொது கேள்வியுடன் நிறைவு செய்துள்ளார். 



Advertisement

Advertisement