தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பழைய திரைப்படங்களை திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. 2000 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளிவந்த படங்கள், தற்போது மீண்டும் புது தலைமுறையை எட்டும் விதமாக திரையரங்குகளில் திரும்பி வருகின்றன. இதற்கான காரணங்களைப் பற்றி பலரும் பல கருத்துகளை கூறுகிறார்கள்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து, "ஒரு படம் ரீ- ரிலீஸ் ஆவதற்கு படத்தின் கதையோ, நடிகர்களோ காரணம் இல்ல அந்த திரைப்படத்தின் பாடல்கள் தான் காரணமாக இருக்கின்றன." என்று கூறியுள்ளார்.
அவருடைய இந்த கூற்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்களிடையே கலந்துரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.
சமீப காலமாக, “ரிதம்” , “குஷி” போன்ற பல வெற்றிப் படங்கள் திரையில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ‘மனிதன்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் வெளியான காலத்திலேயே பாடல்களால் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அந்த பாடல்கள் இன்று கூட ரசிகர்களின் காதுகளில் நின்றிருப்பது கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
Listen News!