• Sep 14 2024

பிக் பாஸ் ஜனனி எப்படி இருக்காங்க பாருங்க.. கடற்கரையில் வைரல் போட்டோ ஷூட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இலங்கையில் பிரபல தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் பிரபல ஹோட்டல்களில் சென்று உணவுகளை ரிவ்யூ பண்ணும் வேலையை செய்து வந்தவர் தான் ஜனனி.

பிக் பாஸில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சென்னைக்கு புறப்பட்டு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஏனையவர்களை விட சிறியவராக இருந்த காரணத்தினால் அனைவராலும் ரசிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் - திரிஷா கூட்டணியில் நடித்த லியோ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.


முதலாவது படமே விஜய்யுடன் நடித்த காரணத்தினால் புகழின் உச்சிக்கே சென்றார் ஜனனி. அதற்குப் பிறகு இவர் விஜய், திரிஷா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆனது.

எனினும் அதற்குப் பிறகு பெரிதாக படங்களில் கமிட்டாகாத ஜனனி ஆல்பம் சாங், போட்டோ ஷூட் செய்வதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.


இவர் ஏனைய நடிகைகளை போல் அல்லாமல் ஆடைகளில் நேர்த்தியை கடைப்பிடித்தார். அதிக கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களை கவரும் வகையில் ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது கடற்கரையில் பிக் பாஸ் ஜனனி எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்  தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்,

Advertisement

Advertisement