• Jan 19 2025

பரிதாபங்கள் கோபிக்கு நடந்த பரிதாபம்! அம்மாவை பற்றி உருக்கமாக பேசிய கோபி!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சினிமாவுக்குள் பலர் பல முறைகளுள் இறங்கினாலும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமாக உள்ளவர்களும் சினிமாக்களில் நடிக்கின்றனர். அவ்வாறு பிரபலமாக இருக்கும் கோபி அவரது அம்மா பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் " என் அம்மாவுக்கு கொஞ்சம் காது கேட்காது. கோழி இறகு வெச்சு அம்மா காதுல குடைஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அதுவே, காதுக்கு பிரச்னை ஆகியிருக்கு. நான், சின்ன வயசுல உன்னை பார்க்காம விட்டுட்டேனேமான்னு இப்போ அழுதேன். நான் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, ‘டேய் நான் காது குடைஞ்சதுக்கு நீ என்னடா பண்ணுவ’ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னாங்க. நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், அவங்களுக்கு காது கேட்கணும்ங்குறதுக்காக 80,000 ரூபாயில காது கேட்கிற மெஷின் வாங்கி கொடுத்தேன். 'ஏண்டா, இவ்ளோ விலை கொடுத்து வாங்கணுமா'ன்னு கேட்டாங்க. ‘நான், சம்பாதிக்கிறதே உனக்குத்தாம்மா'ன்னு சொன்னேன். அதை நான், என் இதயத்துலருந்து சொன்ன வார்த்தை. எங்கம்மான்னா எனக்கு அவ்ளோ உசுரு"


இவ்வாறு பரிதாபங்கள் கோபி குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இவரது இந்த வளர்ச்சி பலருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விதமாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement