• May 18 2025

AI தொழிநுட்பம் மூலம் மீண்டும் இளமையாகும் சத்தியராஜ் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரித்து  குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம்  ‘வெப்பன்’. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க,பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார்.


திரைப்படம் ரிலீஸ்க்கு தயாரான நிலையில் இந்த மாத இறுதியில் தியேட்டரில் எதிர்பார்க்கலாம் என படக்குழு அறிவித்திருக்க  இத் திரைப்படம் மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு  நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 

இப்படம் குறித்து இயக்குநர் குகன் சென்னியப்பன் பேசுகையில்,ஆக்ஷன் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் பின்னணியில் உருவான இப்படத்தில்  சத்யராஜ் ஒரு சூப்பர் ஹியூமனாக நடித்திருக்கிறார்.சில காட்சிகள் AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சத்யராஜ் இந்தப் படத்தில் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாரா அல்லது அவரே ஒரு ஆயுதமாகத் திகழ்கிறாரா என்பது இப்படத்தின் ஒன்லைன் என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Advertisement