• Jun 27 2026

அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்து வருகிறார். ஆரம்பத்திலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.


இப்படம், வட சென்னை திரைப்படத்தின் கதைக்களம் நடைபெறும் காலப்பகுதியில் நடக்கும் இன்னொரு கோணத்தை வெளிப்படுத்தும் கதை என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், “அரசன்” படம் அந்த உலகத்தை மேலும் விரிவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், “வட சென்னை” படத்தில் நடித்த சமுத்திரக்கனி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் “அரசன்” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.


தற்போது, நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய தருணத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


Advertisement

Advertisement