• Sep 19 2024

'இரவின் நிழல்' படத்தின் 'பெஜாரா' வீடியோ பாடல் ரிலீஸ்- இசையில் மிரட்டி எடுத்திருக்கிறார் ஏ. ஆர் ரகுமான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

90களில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்தீபன். இவர் இப்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களிலும் நெக்கட்டிவ் ரோலிலும் நடித்து வருகின்றார். இது தவிர இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் தற்பொழுது 'இரவின் நிழல் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர் 'நந்து' என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் 'பெஜாரா' வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இப்பாடல் காதல் தோல்வியால் இளைஞன் ஒருவன் தன் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இப்படம் வருகிற 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement