• May 13 2024

AK61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியாகிய புகைப்படம்- அஜித் இல்லாமல் படப்பிடிப்பு நடை பெறுகின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் AK61. இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது ஐதராபாத்தில் நடைபெற்றது. இதனையடுத்து இவர் தற்பொழுது ஐரோப்பாவுக்கு டூர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இப்படத்தினை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருவதோடு போனி கபூர் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது புனேயில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் AK61 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்து திடீரென டூர் சென்றுள்ளார். இதற்கு காரணம் இப்படத்திற்காக அஜித் புதிய லுக்கில் மாற உள்ளாராம். அதனால் படப்பிடிப்பை முடித்து விட்டு டூர் சென்றால் ரசிகர்களுக்கு தெரிந்து விடுமாம் என்பதற்காககத் தான் புதிய லுக்கிற்கு மாறுவதற்கு முதல் சுற்றுலா சென்றுள்ளார்.

மேலும் தற்போது நடிகர் அஜித் கலந்து கொள்ளாமல் AK61 படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இயக்குநர் எச்.வினோத் மற்றும் நீரவ் ஷா உள்ளிட்டோர் உள்ளனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement