• May 18 2024

வெளிநாட்டில் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் வெளியிட்ட ஆல்யா பட்- யாருடன் நிற்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஆல்யா பட். இவர் இறுதியாக பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இப்படத்தில் ஆலியாவுடன் இவரது கணவர் நடிகர் ரன்பீர் கபூரும் நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்த ஜோடி முதன்முறையாக நடித்துள்ளனர். ஆல்யா பட் மற்றும் ரன்வீர் திருமணம் ஏப்ரல் 14 அன்று மும்பையில் மிகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது.

திருமணத்தின் பின்னர் கெரியரில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆல்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் உள்ள ஆல்யா தனது புகைப்படத்தை பகிர்ந்து வருவார்.

மேலும் இவர் டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ், ஸ்கை டான்ஸ் தயாரிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஹால் கடோட் மற்றும் 'Fifty Shades Trilogy' நடிகர் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

வெளிநாட்டில் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படப்பிடிப்பில் இருக்கிறார், தனது முதல் ஹாலிவுட் திரைப்படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோனை முழுவீச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளார். இப்போது படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement