• Aug 23 2025

பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீரமல்லு'..– இந்த முறை ரிலீஸ் பக்கா! அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பவன் கல்யாண், கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் பங்களிப்புகள், நடிப்புத் தேர்வுகள் என்பன மூலம் ரசிகர்களிடம் ஒரு வித்தியாசமான இடத்தை ஏற்படுத்தியுள்ளார். 


அந்த வகையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் படமான “ஹரி ஹர வீரமல்லு” தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றது. இப்படத்தின் ரிலீஸ், பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்கள் மனதில் ஏமாற்றம் தோன்றியிருந்த நிலையில், புதிய ரிலீஸ் தேதியின் அறிவிப்பு அவர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தற்போது தயாரிப்பாளர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதின் படி, “ஹரி ஹர வீரமல்லு” திரைப்படம் அடுத்த மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு பல தடவைகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, டெக்னிக்கல் மற்றும் பிற காரணங்களால் படம் தள்ளி வைக்கப்பட்டது.


படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, ரசிகர்கள் தற்போது படத்தை திரையரங்கில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அத்துடன், "ஹரி ஹர வீரமல்லு" திரைப்படம், பவன் கல்யாணிற்கு ஒரு வெற்றிப் பயணமாகவே இருக்கப் போகிறது எனவும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement