• Jan 05 2025

ரோகிணி விஷயத்தில் பயத்தை கிளப்பிய பார்வதி.. மீனா எடுத்த சபதம்? குழப்பத்தில் விஜயா

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா முத்துவுடன் தான் செய்த டெக்கரேஷன் மாடல்களை எடுத்துக்கொண்டு மண்டபத்துக்கு செல்கின்றார்.  இதன் போது மீனா மேனேஜரை பார்க்கச் செல்ல, தானும் வருவதாக முத்து சொல்லுகின்றார். ஆனாலும் இது என்னோட பிசினஸ் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று மீனா சொல்லுகிறார்.

தொடர்ந்து தான் கொண்டு வந்த டிசைன்களை காட்டி மேனேஜரிடம் வாய்ப்பு கேட்க,  அந்த இடத்திற்கு டெக்கரேஷன் ஆர்டர் எடுக்கும் பெண்மணி வருகின்றார். அவர் மீனாவிடம் வந்து வம்பு இழுத்ததோடு அவருடைய ஆட்கள் மீனாவின் டெக்கரேஷன் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு நொறுக்குகின்றார்கள்.

இதனால் கோபப்பட்ட மீனா ஒரு நாள் இந்த டெக்கரேஷன் எல்லாம் கோபுரமா மாறும் என சவால் விட்டு அங்கு இருந்து செல்லுகின்றார். இன்னொரு பக்கம் பார்வதி வீட்டுக்கு வந்த  விஜயாவிடம் கிளாஸ் பற்றி பேச, அவர் இன்னும் இரண்டு நாள் போக ஆரம்பிக்கலாம் என்று சொல்கின்றார்.


அதன் பிறகு வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல, என்னதான் இருந்தாலும் ரோகிணி தனக்காக எதுவும் பண்ணவில்லை தானே எல்லாம் மனோஜூக்காக தானே  பண்ணினார்.  ரோகினியை சமாளித்து செல்வதுதான் நல்லம். 

அப்படி இல்லை என்றால் ஒரு நாள் பணக்கார வீட்டு பொண்ணு என்று ரோகிணிக்கு பின்னால் மனோஜ் சென்று விடுவான் பிறகு நீயும் என் போல தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று பயமுறுத்தி அனுப்புகின்றார்.

இன்னொரு பக்கம் அண்ணாமலை வீட்டுக்கு வந்ததும் மீனா ரோகிணியும் மனோஜூம் பேசுவதில்லை அவர்களை சமாதானம் பண்ணுமாறு பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் வந்த விஜயா இதையெல்லாம் சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடுறியா என்று சத்தம் போடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement