விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். இது இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
புதிதாக டாஸ்க் கொடுத்த பிக் பாஸ் " அருணுடைய ஒரு பாய்ண்ட 10 பேரும் எப்படி பிரிச்சிக்கிறது என்று முடிவுசெய்ங்க" என்று சொல்கிறார். "இந்த ரவுண்டில் அருணுக்கான சான்ஸ் முடிந்து விட்டது. இந்த ரவுன்ல நாங்க 9 பேர் இருக்கோம்" என்று முத்து சொல்கிறார். அப்போது மஞ்சரி "உங்களுக்கு இந்த கேம்ல யாரு இருக்கக்கூடாதுனு நினைக்கிறீங்களாலோ அவங்களை பாய்ண்ட் பண்ணி அடிங்க" என்று சொல்கிறார்.
"எல்லா இடத்துலயும் அந்த மாதிரி எல்லாம் என்னால விட்டுக்கொடுத்து போக முடியாது" என்று ஜாக்குலின் சொல்கிறார். அதற்கு முத்து "உன்ன விட்டு கொடுத்து விளையாட சொல்ல இல்லையே" என்று சொல்கிறார். தற்போது பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்கினால் போட்டியாளர்களிடையே சலசலப்பு இடம்பெறுகிறது. அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது
Listen News!