• Jun 23 2024

அம்மு அபிராமிக்கு பார்த்திபன் வைத்த செல்லப்பெயர்.. அப்ப காதல் கன்பர்ம் தானா?

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபனை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் பார்த்திபன் பிறந்தநாளின் போது அவருடன் நெருக்கமாக எடுத்த வீடியோவையும் பதிவு செய்து காதலை கன்பர்ம் செய்திருந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பார்த்திபன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் இந்த ஆண்டு பிறந்தநாள் மிகவும் சிறப்பாக நடந்தது என்றும், அன்பான வாழ்த்துக்களுடன் கடவுள் ஆசியும் எனக்கு கிடைத்தது என்றும், ஒவ்வொரு நிமிடமும் தனக்கு மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு நாளாக இருந்தது என்றும் அனைவருக்கும் எனது நன்றி  என்றும் தெரிவித்து இருந்தார்.

அது மட்டும் இன்றி ஏராளமான நபர்கள் கையால் எழுதப்பட்ட லெட்டர்கள் மூலம் தனக்கு வாழ்த்துக்களை அனுப்பினார்கள் என்றும், ஆச்சரியத்தக்க பரிசுகளையும் அளித்தார்கள் என்றும், நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்தேன் என்றும், அடுத்த பிறந்த நாளுக்கு இப்பவே வெயிட்டிங் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன் பின் அவர் பதிவு செய்தது தான் ஆச்சரியம், ’அன்பிற்கு நன்றி டியர் அபி’ என்று அவர் அம்மு அபிராமிக்கு அபி என்ற செல்ல பெயர் வைத்து தனது நன்றியை தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து இந்த பதிவுக்கு நெட்டிசன்ஸ் பலர்  அம்மு அபிராமி உடன் காதல் கன்ஃபார்ம் போல, விரைவில் திருமணம் செய்தியை அறிவிங்கள், என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பதிவை முதல் நபராக அம்மு அபிராமி லைக் செய்துள்ளார் என்பதை எடுத்து இருவருக்கும் காதல் என்பது கிட்டத்தட்ட உண்மை என்று தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement