• Feb 08 2026

ஒரேயடியாக தள்ளிப்போய்விட்டது ‘புஷ்பா 2’.. ஆனால் அதிலும் ஒரு அற்புதமான ஆச்சரியம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ’தங்கலான்’ உள்பட ஒரு சில படங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரேடியாக டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுவது அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கிராபிக்ஸ் பணிகள் முடிய மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டதால் தான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியான நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து அதே மாதம் அதே தேதியில் ’புஷ்பா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பதுதான்.

உலகில் எந்த ஒரு படமும் முதல் பாகம் வெளியான அதே மாதம் அதே தேதியில் இரண்டாம் பாகம் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படும் நிலையில் அந்த ஒரு ஆச்சரியம், அற்புதம் ’புஷ்பா 2’ படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement