• Jan 18 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ செய்திக்கு சீனியர் நடிகர் ரவிச்சந்திரன் மறுப்பு.. உண்மை இதுதான்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து வரும் சீனியர் நடிகர் ஒருவர் தன்னை 3 மாதமாக ஷூட்டிங்கிற்கே  கூப்பிடவில்லை என்று அதிருப்தி அடைந்து சேனல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக வெளியான செய்திக்கு ரவிச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது என்பதும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

முதல் பாகத்தில் அண்ணன் தம்பிகள் பாசப்பிணைப்பு கொண்ட கதையம்சம் இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அப்படியே அது அப்பா மகன்கள் என்ற பாசத்தை பொழியும் வகையில் கதை அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக நிரோஷா மற்றும் இந்த தம்பதியின் மகன்களாக ஆகாஷ் பிரேம்குமார், விஜே கதிர்வேல், வசந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்

அதேபோல் முதல் பாகத்தில் நடித்த ஹேமா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பதும் ஹேமாவின் அப்பாவாக நடித்து வந்த ரவிச்சந்திரன் முதல் பக்கத்தில் சூப்பராக நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.. ஆனால் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற தவறான தகவல் பரவியதற்கு ரவிச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரக்டருக்கு உரிய முக்கியத்துவம் இருக்கிறது என்றும் விரைவில் தன்னுடைய காட்சிகளை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement