• Jan 18 2025

சாய் பல்லவிக்காக 500 கோடி ரூபாய் செலவு செய்கிறாரா ’கேஜிஎப்’ யாஷ்? என்ன காரணம்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ், மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க ராமயணா படத்தில் நடிக்க உள்ளார்.

அதன்படி, ராமயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் சரித்திர படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.


இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். 


இந்த நிலையில், ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படத்தில் ராவணன் கேரக்டரில் நடிகர் யாஷ் நடிக்கிறார் என்ற தகவலும் இந்த படத்தின் கோ ப்ரொடியூசர் யாஷ் தான் என்ற  தகவலும் அதிகார்வபூர்வமாக வெளியாகி உள்ளது. 

மேலும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதேவேளை, 1,000 கோடி பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் திரைப்படம் தயாராகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement