• Jan 18 2025

எப்படி வந்துச்சு இம்புட்டு தைரியம்.. பாண்டியன் கன்னத்தில் அறைகிற மாதிரி சொன்ன பழனி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென சரவணன் ’நீ வீட்டிலேயே இருப்பதால் தான் உனக்கு பல யோசனைகள் வருகிறது, நீ தான் எம்ஏ படிச்சிருக்கியே, வேலைக்கு செல்லலாமே’ என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த தங்கமயில் இனிமேல் தேவையில்லாமல் வாயை கொடுக்கக் கூடாது என்று அமைதியாக படுத்து தூங்குகிறார்.

இந்த நிலையில் பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாண்டியன் ’கதிர் இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம், எதற்காக கஷ்டப்பட்டு இரவு பகலாக முழித்து வேலை பார்க்க வேண்டும், நம்ம கடையிலே வந்து வேலை பார்க்கட்டும், கதிர் செலவையும் ராஜி செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறுகிறார்.

அப்போது கதிர் ’முடியாது’ என கூற ஆத்திரம் அடையும் பாண்டியன் எதற்காக முடியாது என்று கூறுகிறாய்? என்று கேட்க ’வீட்டில் உங்களிடம் அவமானப்பட்டது பத்தாதா, கடைக்கு வந்து அவமானப்பட வேண்டுமா? நான் 6000 ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன், நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கேட்டீர்கள், அந்த பணத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என்று கூறுகிறார். இதனால் மீண்டும் ஆத்திரம் அடையும் பாண்டியன் கதிர் கன்னத்தில் பளாரென அடிக்க, ராஜி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.



இதனை அடுத்து பாண்டியன் மற்றும் பழனி ஆகிய இருவரும் கடைக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் சில வேலைகளை பாண்டியன் சொல்கிறார். அப்போது சரி சரி என்றும் சொல்லும் பழனி, திடீரென தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சில விஷயங்களை சொல்கிறார்.

கதிர் மீது மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி கரிசனம், அவன் முன்பு போல் இல்லை, திருமணம் ஆகி ஒரு பொண்டாட்டி இருக்கிறார், மனைவி முன் அடிப்பது சரியா? அதுமட்டுமில்லை, இந்த வீட்டுக்கு 2 வாழ வந்த பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் முன் கதிரை அடித்தால், கதிர் என்ன நினைப்பான், கதிருக்கு தேவையான மரியாதையா மத்த ரெண்டு மருமகள்களும்  கொடுப்பாங்களா?  

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது, கொஞ்சம் கூட யோசிக்காமல் நீங்கள் கதிரை அடிப்பது சரியில்லை ,கதிர் மீது மட்டும் ஏன் உங்களுக்கு கோபம்’ என்று மண்டையில் ஏறும் வகையில் பாண்டியனுக்கு பழனி அறிவுரை கூறுகிறார். பாண்டியன் இதைக் கேட்டு அமைதியாக வரும் நிலையில் அவர் தனது தவறை உணர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement