• Jan 19 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: சினிமா அடியாள் மாதிரி இருக்கான்.. தங்க மயிலுக்கு மாப்பிள்ளை பிடிக்கலை.. உளறுவாய் கோமதி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாண்டியன் - கோமதி தம்பதியின் மூத்த மகனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது என்பது தெரிந்தது. சுயம்வரத்தில் பார்க்க தங்கமயில் என்ற பெண்ணையே முடிவு செய்த பாண்டியன் குடும்பத்தினர், பெண் பார்க்க கிளம்புகின்றனர். 

ஆனால் தங்கமயில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பிராடு மற்றும் ரவுடிகள் என்பது தெரியாமல் அப்பாவி பாண்டியன் குடும்பத்தினர் அந்த வீட்டுப் பெண்ணை பெண் பார்க்க கிளம்புகின்றனர்.

இந்த நிலையில் தங்கமயில் தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும் சினிமா அடியாள் மாதிரி இருக்கிறான் என்று கூற, உடனே அவரது அம்மா அவரை திட்டுகிறார். உன்னுடைய ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, நம்மிடம் ஒரு பைசா கூட இல்லை, இருந்தாலும் அவர்கள் உன்னை பிடித்து விட்டது, வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்ய சம்மதித்திருக்கிறார் கள். மாப்பிள்ளையின் அம்மாவ பார்த்தா அப்பாவி போல இருக்கிறது, மாமியார் தொல்லையும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சம்பந்தம் நமக்கு கிடைக்காது, உனக்கும் வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால் இந்த மாப்பிள்ளையை கட்டிக்கொள் என்று கட்டாயப்படுத்துகிறார். 



இந்த நிலையில் பெண் பார்க்க பாண்டியன் குடும்பத்தினர் ஒட்டுமொத்த குடும்பத்தோடு வரும் நிலையில் அவர்களுடைய நடக்கும் பேச்சுவார்த்தை குறித்த காட்சிகள் இன்றைய எபிசோட்டில் உள்ளன. பாண்டியன் மனைவி கோமதி அப்பாவியாக தனது இளைய மகன்கள் இரண்டு பேருக்கும் காதல் திருமணம் ஆகி விட்டதால் மூத்த மகனுக்கு பெண் கிடைக்கவில்லை என்று உளர, மருமகள்கள் இருவரும் அதை சொல்ல வேண்டாம் என்று ஜாடை காட்டுகிறார்கள். 

அப்போது பாண்டியன் உண்மையை சொல்வதில் தவறில்லை ,சம்பந்தம் பண்ண போகிறவர்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும், அவர் இதையெல்லாம் தெரிந்து பெண் கொடுத்தால் கொடுக்கட்டும், அல்லது கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார். 

பாண்டியன் இந்த அளவுக்கு அப்பாவியாக, வெள்ளேந்தியாக இருக்கும் நிலையில் பெண் வீட்டாரோ கொத்து கொத்தாய் பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். தங்களுக்கு ஏகப்பட்ட சொந்த பந்தம் இருப்பதாகவும், தங்கமயில் மாஸ்டர் டிகிரி படித்திருப்பதாகவும் அளந்து விடுகின்றனர். தனது அப்பாவும் அம்மாவும் இப்படி கூசாமல் பொய் சொல்கிறார்களே என்று சங்கடத்தில் இருக்கும் தங்கமயில், ஒரு பக்கம் மாப்பிள்ளை பிடிக்காமல் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தனது பெற்றோர் இவ்வாறு பொய் சொல்வதையும் அவர் ரசிக்கவில்லை. 

இந்த நிலையில் நான் சரவணன் - தங்கமயில் திருமணம் நடக்குமா? ஒருவேளை திருமணம் நடந்தாலும் இருவருக்கும் ஒத்துப்போகுமா? என்பதை எல்லாம் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement