• Jan 19 2025

பழனிச்சாமி ஒன்னும் கோபி போல கிடையாது! பாக்கியாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! அப்செட்டில் கோபி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், பாக்கியா கோபி பற்றி நினைத்து செல்வியிடம் திட்டிக் கொண்டு இருக்கிறார். அவரும் நீ பழனிச்சாமியை கல்யாணம் பண்ணிக்கோ அக்கா என சொல்ல, எனக்கு அவர் நண்பர் மட்டும் தான் என சொல்கிறார்.

அடுத்து, செழியனுக்கு எழில் தேங்க்ஸ் சொல்கிறார். மேலும் குழந்தையின் போட்டோவை காட்டி பீல் பண்ணுகிறார். அங்கு வந்த கோபி, பாக்கியா பற்றி பேசுகிறார். எல்லாத்துக்கும் பாக்கியா தான் காரணம் என சொல்ல, அவர்கள் இருவரும் அம்மாவை விட்டுக் கொடுக்காமல் கதைத்துவிட்டு செல்கிறார். 



இதை தொடர்ந்து ராதிகாவிடம் நடந்தவற்றை கூறி, பசங்க எல்லாரும் அவங்க அம்மா பக்கம் தான் என கவலைப்பட்டு கதைக்க, உங்களுக்கு நான் இருக்கன் என்று தைரியம் கூறுகிறார் ராதிகா.

இதையடுத்து, பாக்கியா ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பது பற்றி எல்லாருடனும் பேசி, அதை ஓபன் பண்ண திகதியும் பார்த்து தருமாறு ராமமூர்த்தியிடம் சொல்கிறார். இதை எல்லாம் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த கோபி அப்செட் ஆகிறார்.

ராதிகாவிடமும் இதை பற்றி சொல்லி, நானும் பேசாம கேன்டின் ஆரம்பிச்சி இருக்கலாம் என்று புலம்புகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement