தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தற்போது உச்சகட்ட அந்தஸ்தை பெற்ற முன்னணி நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்கிறார்.
தமிழக வரலாற்றை பொறுத்தவரையில் சினிமா துறையில் நடிக்கும் நட்சத்திரங்களில் சிலர். அரசியலில் களமிறங்கி சிஎம் நாற்காலியை பிடிப்பது எம்ஜிஆர் காலம் முதற்கொண்டு தற்போது வரையில் தொடர்ந்து வருகின்றது.
இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் சீமான், உலகநாயகன் கமலஹாசன் என பலரும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு அரசியலில் களம் இறங்கினார்கள்.
ஆனாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது உடல் நலத்தை கருதிக் கொண்டு அரசியலில் இறங்கவில்லை. ஆனாலும் படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து இளைய தளபதி விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்து அளிக்கும் வகையில், தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய கட்சி பெயருடன் பிரம்மாண்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் விஜய்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகளை வழங்க தவெக முடிவு செய்துள்ளதாம்.
மேலும், புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாம்.
அத்துடன், தவெக கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதோடு, அந்த உறுப்பினர் சேர்க்கைக்கென செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம் எனவும் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!