• Jan 22 2026

சூர்யாவுடன் இணைந்து நடிப்பது என் நீண்ட நாள் கனவு.. க்ரித்தி ஷெட்டி ஓபன்டாக்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் புதிய தலைமுறை நடிகைகள் பல வாய்ப்புகளைத் தேடி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில், க்ரித்தி ஷெட்டி அவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களில் பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.


சமீபத்தில், க்ரித்தி ஷெட்டி தன்னுடைய எதிர்கால திட்டங்கள் மற்றும் முன்னணி நடிகர் சூர்யா சாருடன் இணைந்து நடிக்கத் தீர்மானித்த ஒரு அனுபவத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

க்ரித்தி ஷெட்டி அதன்போது, “நான் கிட்டத்தட்ட சூர்யா சாருடன் ஒரு படத்தில நடிக்கிறதுக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது இறுதிக் கட்டத்தில் நடக்கவில்லை. இருப்பினும் அவரோட பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இப்பொழுதும் உள்ளது. எதிர்காலத்தில் நான் கண்டிப்பாக அவருடன் இணைந்து நடிப்பேன்.” எனக் கூறியுள்ளார். 


இந்தக் கருத்து அவரது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன அனுபவம் சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும், ஆனால் க்ரித்தி ஷெட்டி தனது நேர்மையான மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement