• Nov 22 2024

ஈழத்தின் அழியாச் சுவடுகளை பேசும் 'ஒற்றைப் பனை மரம்'.. தமிழகத்தில் அக்டோபர் 25 ரிலீஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'மண்' படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது பெற்ற புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஒற்றைப் பனை மரம். இந்த படத்தின் கதைக்களம் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பித்து, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொள்ளும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக புதியவன் ராசையா, அஜாதிகா புதியவன், நவயுகா, மாணிக்கம் ஜெகன், தனுகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இந்தப் படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளதோடு தமிழில் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே  கொண்டு  இசை அமைத்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய உயிரோட்டமாக அமைந்துள்ளது. இதனாலையே அவர் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இயல்பாக காணப்படுவதோடு இதில் நடித்துள்ளவர்களின் எதார்த்தமான நடிப்பு, இதயத்தை கணத்து போக வைக்கும் திருப்பங்கள் என்பன கதைக்குள் ஆழமாக அழைத்துச் சென்று  கிளிநொச்சியில் உள்ள கிராமத்திலேயே வாழவைத்து விடுகின்றன.


40 சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றிய இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளது. இந்த படத்திற்கு சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும். தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், RSSS  பிக்சர்ஸ் சார்பில் எஸ். தணிகைவேல் தயாரிப்பில் உருவான 'ஒற்றைப் பனைமரம்' எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெளியாக உள்ளதாக அதிகார்வ பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.



Advertisement

Advertisement