• Mar 28 2026

பிக் பாஸில் உங்க பருப்பு வேகலையா? கோபத்தில் ரவீந்தர்! பிக் பாஸ் போட்ட புது பிளான்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ல் ரவீந்தர் பங்கு பற்றி இருந்தார். தனக்கு தெரிஞ்ச ஸ்டெட்ஜில அவர் விளையாடி இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு  வெளியேறி இருந்தார். வெளியே வந்ததும் போட்டியாளர்களுக்கு தரமான அட்வைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் அலிமிடெட் fun என்று ஒரு ஷோவை ஆரம்பிக்கயுள்ளனர். இதன் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 


ரவீந்தரிடம் 7 சீசனா பார்த்து இருக்கேன் செமயா ஸ்டேட்டஜி எல்லாம் தெரியும் உள்ள போனா நல்ல விளையாடுவேன்னு சொன்னிங்க உங்க பருப்பு வேகலையா என்று அறிவிப்பாளர் கேட்டதற்கு ரவீந்தர் நான் எதும் பண்ணாதது நால உள்ள இருக்கேன் எல்லாம் பண்ணிட்டு அவங்க வெளிய இருக்காங்க. 


ரவீந்தராலே பேசமட்டும் தான் முடியும் விளையாட முடியாதுனு சொல்லுறாங்கலே அத பத்தி என்ன நினைக்குறிங்க? என்னால விளையாட முடியாதுனு மக்கள் சொல்ல இலை நீங்க சொன்னது. மீண்டும் தொகுப்பாளர் மக்கள் சொன்னனாலத்தான் நீங்க இப்ப வெளிய இருக்கீங்க என்று சொல்கிறார். மக்கள் நான் நல்லா இருக்கணும்னு நினைச்சனாலத்தான் நான் வெளிய இருக்கிறேன் என்று ரவீந்தர் சொல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.  



Advertisement

Advertisement