• Jan 19 2025

நேற்று ஆபரேஷன், இன்று ஃபுட்பால் மேட்ச்? ரெஸ்ட் இல்லாமல் தல அஜித் செய்த காரியம்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் 'தல' என செல்லமாக அழைக்கப்படும் பிரபல நடிகருமான அஜித், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் தொடர்பில் பல்வேறு வதந்தி தகவல்களும் வெளியானது.

ஆனாலும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, குறித்த தகவல்கள் வதந்தி என்றும், அஜித்தின் காதிற்கு கீழ் சின்ன கட்டி இருந்ததாகவும் அது அகற்றப்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.


இந்த நிலையில், அதிர்ச்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது மகனின் ஃபுட்பால் மேட்சைப் பார்க்க மனைவி ஷாலினியுடன் அஜித் சென்றுள்ளார்.


நடிகர் அஜித்திற்கு புட்பால் மேட்ச் மற்றும் கார் ரேசிங் என்றால் அதிகளவில் ஆர்வம் கொண்டவர். அதே போல அவருடைய மகனுக்கும் புட்பால் மேட்ச் என்றால் மிகுந்த ஆர்வம்.

அஜித்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர், அவர் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தனது மகனின் விளையாட்டை பார்ப்பதற்காக நேரடியா ஸ்டேடியத்திற்கு வந்துள்ளார்.

இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அஜித்துடன் சேர்ந்து எடுத்த  வீடியோக்களும் புகைப்படங்களும் தான் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

Advertisement

Advertisement