• Jun 06 2026

ஒருவிரல் புரட்சியே.!! ஜனநாயக கடமையை முடித்த தவெக தலைவர் விஜய்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி தமிழ்நாட்டில் முதலாவது ஆளாகவே ஏழு மணிக்கு சென்று நடிகர் அஜித்குமார் தன்னுடைய வாக்கை செலுத்தினார். இதன்போது அவர் வெள்ளை நிற கோட் அணிந்து வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று நீலாங்கரையில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார் விஜய்.

அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அமோகமாக காணப்படுகிறது. சிறுவர்கள் கூட தங்களுடைய பெற்றோரிடம் விஜய்க்கு ஓட்டு போடுமாறு தெரிவித்த காட்சிகளும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.


அது மட்டுமின்றி இம்முறை அதிக அளவானோர் வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய வாக்குரிமையை செலுத்துவதற்காக மீண்டும் நாடு திரும்பிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் நீலாங்கரையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் விஜய் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தபோது, விரலில் வைக்கப்பட்ட மையை ரசிகர்களுக்கு காட்டியது அங்கிருந்த மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

விஜய் வருவதற்கு முன்பே பலர் அங்கு காத்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்பட்டபோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது பலரும் தங்களுடைய வாக்குகளை உற்சாகமாக சென்று செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாக காணப்படுகின்றன.

Advertisement

Advertisement