• May 16 2026

விஜயின் விவாகரத்து வழக்கு வெறும் வதந்தியா.? பிஸ்மியின் அதிர்ச்சி கருத்து வைரல்!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதிலும் மனைவி சங்கீதா 27 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக விவாகரத்து கோரியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில் 2021 ஆம் ஆண்டிலிருந்து இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் 2017 ஆம் ஆண்டிலிருந்தே இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

மேலும் மனுவில் கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த நடிகையான த்ரிஷா இது தொடர்பில் எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்தார். 

எனினும் விஜயுடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது.


இந்நிலையில் பிரபல பத்திரிகை விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி விஜயின் விவாகரத்து தொடர்பில் அதிர்ச்சியான கருத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

"விஜயின் குடும்ப விஷயங்கள் பற்றி ஊடகங்களில் வருவது அனைத்தும் முற்றிலும் வதந்தி. சங்கீதாவும் மகளும் விஜயின் வீட்டின் தரைத்தளத்தில் தான் இருக்கின்றனர். விஜய் முதல் மாடியில் இருக்கிறார். விஜயின் விவாகரத்துப் பின்னணியில் ஒரு அரசியல் சதுரங்கம் உள்ளது.." என தெரிவித்துள்ளார். 

இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement