• Jun 06 2026

மொத்தமா போட்டுக் கொடுத்த சிந்தாமணி.! விஜயா குடும்பத்தில் அடிதடி.. பரபரப்பான எபிசோட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிந்தாமணியை காப்பாற்ற அவருடைய கணவர் வருகிறார். மேலும் அவருடைய ஆட்களை வைத்து சிந்தாமணி தப்பு செய்யவில்லை என்று நிரூபித்து அவரை ஜாமினில் எடுக்கிறார்.

சிந்தாமணியை பார்க்க வந்த ரோகிணி கவலைப்பட்டு பேசுகிறார். ஆனாலும் சிந்தாமணி இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.

இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த முத்து, சிந்தாமணி கைதான விஷயத்தையும் மீனாவை தாக்கியது சிந்தாமணி தான் என்ற விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் அதனை விஜயா நம்ப மறுக்கிறார்.


அந்த நேரத்தில் அங்கு சிந்தாமணி வருகிறார். முத்து தான் அவரை அடித்து மிரட்டி தனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்ததாக கூறுகிறார். ஆனாலும் முத்து, பணம் இருந்தால் எல்லாம் செய்வீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

மேலும் அங்கு வட்டிக்காரரும் வருகிறார். மனோஜும் விஜயாவும் செய்த அத்தனை மோசடிகளையும் வீட்டினருக்கு தெரியப்படுத்துகிறார். மொத்தம் 48 லட்சம் வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னதும் அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.

எனினும் நான் கையெழுத்து போடவில்லை என்று அண்ணாமலை கூற, ஒரு கட்டத்தில் மனோஜ் தான் அம்மா சொல்லித்தான் அந்த கையெழுத்தை போட்டதாக ஒத்துக்கொள்கிறார். இதனால் முத்து, ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனோஜை அடித்து வெளுக்கின்றனர்.. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement