• Jan 19 2025

’ஆபீஸ்’ சீரியல் நாயகி ஸ்ருதிக்கு ஜோடியாகும் விஜய் நண்பர்.. சன் டிவியில் ஒரு மெகா சீரியல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல், திருமதி செல்வம், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ் தற்போது மீண்டும் சன் டிவியில் ஆரம்பமாக உள்ள மெகா சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடரில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ராஜ். இவர் தென்றல் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் என்பதும் ஆறு வருடங்கள் ஒளிபரப்பான அந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து திருமதி செல்வம், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள், அழகு, தாலாட்டு, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்தார்




இந்த நிலையில் தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு மெகா சீரியலில் நடிக்க இருப்பதாகவும் இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் ஸ்ருதி ஜோடியாக திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Advertisement

Advertisement