• Mar 20 2026

எத்தன படம் வந்தாலும் "பராசக்தி" வசூலை அசைக்க முடியல.! வெளியான பாக்ஸ் ஆபிஸ் விபரம் இதோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ‘பராசக்தி’, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொங்கல் காலப்பகுதியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், சமூக, அரசியல் மற்றும் உணர்ச்சி காட்சிகள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை பெற்றது.


‘பராசக்தி’ திரையரங்குகளில் வெளியான முதல் நாள் பெரும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டது. திரைப்படம் வெளியிடப்பட்ட ஒன்பது நாட்களுக்குள், வெளிநாடு மற்றும் உள்ளக சந்தைகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

சமீபத்திய தகவல்களைப் பொறுத்து, ‘பராசக்தி’ வெளியான ஒன்பது நாட்களில் உலகளவில் ரூ.84 கோடி வசூலித்துள்ளது. இது தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறலாம். அத்துடன் இத்தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement