தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் ஜனவரி 15ம் தேதி வெளியான திரைப்படம் “தலைவர் தம்பி தலைமையில்” திரையரங்குகளில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படம் தியேட்டரிலும் வெற்றி அடைந்தது, ஆனால் சில வசனங்கள் மற்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப்படத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது போலவே, “படிச்சி படிச்சி சொன்னேனடா.." என்ற வசனத்தை ஜீவா கூறியிருப்பார்.
இந்த வசனம் திரைப்படத்தில் இடம்பெறுவதால், சில பார்வையாளர்கள் இதை சமூக, அரசியல் பின்னணியுடன் இணைத்து விமர்சித்தனர், மேலும் இதன் காரணமாக சில தரப்பினரிடையே சர்ச்சை உருவானது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஜீவா செய்தியாளர்களிடம் நேரடியாக விளக்கமளித்தார். அவர் அதன்போது, “யாரையும் காயப்படுத்தும் என்ற உள்நோக்கத்தோடு இதை செய்யவில்லை. ஒரு ஜாலிக்காக மட்டுமே செய்தோம். ஒரு ட்ரெண்டிங்காக செய்தோம். இந்த வசனத்தை பேச சொன்னது இயக்குனர் தான்.”என்று கூறியுள்ளார்.
ஜீவாவின் பேட்டி, அவரின் நேர்மையை வெளிப்படுத்துகிறது; அவர் எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும், சமூக குழப்பத்திற்காகவும் இந்த காட்சியை கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இது குறித்து விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதாவது, “பழியை தூக்கி இயக்குனர் மீது போட்டுவிட்டார் ஜீவா. படம் ஹிட் அடித்தால் அதற்கு ஹீரோ காரணம். அவர்களுக்கு சம்பளமும் பல கோடி அதிகமாகும். அதுவே தோற்றாலோ, சர்ச்சை வந்தாலோ இயக்குனர் தான் காரணம். வெளங்கும்டா கோடம்பாக்கம்.” என்று தெரிவித்துள்ளார்.
Listen News!