தமிழ் சினிமாவின் சமீபத்திய ரிலீஸ் திரைப்படங்களில் ஒன்றாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய ‘பராசக்தி’ திரையரங்குகளில் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்துள்ளது. இந்த படம் கடந்த 10-ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியானது, பொங்கல் காலத்தில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே, விஜய் நடிப்பில் உருவாகி சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியீடு தாமதமாகிய ‘ஜனநாயகன்’ படத்துக்கு போட்டியாக பராசக்தி பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பராசக்தியை விமர்சித்து வந்தனர். இது தொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு பேட்டியில் சரியான விளக்கம் வழங்கியுள்ளார்.
சுதா கொங்கரா அதன்போது, “பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள் என நினைக்கவில்லை. அவர்கள் விஜய் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது. நான் பதிவு செய்திருப்பவை கூட மென்மையானவை. பல மோசமான விமர்சனங்கள் வருகின்றன.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “ஒரு பெண்ணின் கனவுகளை உங்களால் சிதைக்க முடியாவிட்டால், அவளது நடத்தையை சிதையுங்கள். வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது, வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா?” என்றார்.
இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பல ரசிகர்கள் இதை வாழ்த்தி விமர்சித்துள்ளனர்.
Listen News!