2018 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி, அண்ட்ரியா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தார்கள். இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.
தனுஷ் கேரியரில் இந்த படம் மிகச் சிறப்பாக காணப்பட்டதோடு இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த பாடல்களும் பெரும் கவனத்தைப் பெற்றது. அதன் பின்பு இதன் இரண்டாம் பாகம் பற்றி நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
விடுதலை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்ற போது வடசென்னை 2 படம் விரைவில் உருவாகும் என வெற்றிமாறன் கூறியிருந்தார். இந்த படம் வடசென்னை மக்களின் வாழ்வியலை மிகச் சிறப்பாக பேசியதாகவும் விமர்சிக்கப்பட்டது.
தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்பு வடசென்னை 2 படத்தை இயக்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் இயக்க வில்லை என்றும் அவரது உதவி இயக்குனர் கார்த்திகேயன் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் அமீர் நடிக்கப் போவதில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது .
வட சென்னை படத்தில் தனுஷ் - வெற்றிமாறனின் கூட்டணி சிறப்பாக காணப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படம் மேஜிக் ஆகும் எனவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் தான் இந்த படத்தில் இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் தற்போது இவர்கள் இல்லாத இந்த படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!