• Sep 09 2024

கொஞ்சம் பொறுமையா இருங்க.. நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்! கோட் தயாரிப்பாளர் ட்விட்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் இறுதியாக நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார்  விஜய்.

அதன்படி வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றார்கள். இதன் காரணமாகவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

கோட் படத்திலிருந்து இதுவரையில் மூன்று பாடல்கள் வெளியானது அதில் இரண்டு பாடல்கள் விஜய் பாடிய பாடல்கள். ஆனாலும் மூன்று பாடல்களுமே கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. இறுதியாக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஸ்பார்க் பாடலும் படு ட்ரோலுக்கு உள்ளானது. அதற்கு காரணம் அந்த பாடலில் விஜய் டெக்னாலஜி மூலம் இளமையாக காட்டப்பட்டது தான். அதற்கு பதில் அவரை இயற்கையாகவே காட்டியிருந்தாலே அவர் இளமையாக தான் இருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.


இதன் காரணத்தினால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ஓரளவு தடுமாறியதோடு இந்த படத்தின் டிரைலர் எப்படி இருக்குமோ என்ற பயமும் ரசிகர்களிடையே காணப்பட்டது.

இந்த நிலையில், கோட் படத்தின் டிரைலர் குறித்து இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், உங்களுக்காக ஒரு அற்புதமான டிரைலரை நாங்கள் தயார் செய்கின்றோம். எனவே சற்று அமைதியாக இருங்கள். மேலும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாளை உங்களுக்கு சரியான தகவலை தருவேன் என கூறியுள்ளார். எனவே கூடிய விரைவில் இந்த படத்தின் டெய்லர் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement