• Jan 19 2025

இனிமேல் காதலும் வேண்டாம், கத்தரிக்காயும் வேண்டாம்.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை நிதி அகர்வால் பிரபல நடிகருடன் காதலில் இருந்த நிலையில் அவர் தனக்கு வந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் இழந்ததாகவும் தற்போது அவர் அந்த காதலில் இருந்து மீண்டு வந்து முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்த போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை நிதி அகர்வால் சில தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் தமிழில் அவர் சிம்புவுடன் ’ஈஸ்வரன்’ ஜெயம் ரவியுடன் ’பூமி’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் ’கலகத்தலைவன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த மூன்று திரைப்படங்களுமே சுமாராக ஓடிய நிலையில் அதன் பின் அவர் ஒரு மாஸ் நடிகருடன் காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது.

இந்த காதல் நிச்சயம் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் இதையடுத்து தற்போது அவர் இனிமேல் காதலும் வேண்டாம் ஒரு கத்திரிக்காயும் வேண்டாம் என்று முடிவு செய்து முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது முயற்சிக்கு கிடைத்த கை மேல் பலனாக பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடித்த ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தமிழில் கூட அவர் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் அழகான மற்றும் திறமையான நடிகை என்று பெயர் எடுத்த நிதி அகர்வால் காதல் காரணமாக திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் திரை உலகில் கவனம் செலுத்த உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement