• Jan 19 2025

நடிகை பூஜாகுமாரியை சுத்தி சுத்தி வெள்ளை துணியை கட்டுறாங்களே.. என்ன ஆச்சு? வீடியோ வைரல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா குமாரி மீது சுத்தி சுத்தி வெள்ளை துணியை கட்டும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகை பூஜா குமாரி அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதும் சில அமெரிக்க படங்களிலும் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார். முதன்முதலாக அவர் கடந்த 2000 ஆண்டு ’காதல் ரோஜாவே’ என்ற படத்தில் நடித்த நிலையில் அதன் பின்னர் அவர் சில ஆங்கில மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆன பூஜா குமாரி, அதனை அடுத்து கமல்ஹாசன் உடன் ’உத்தம வில்லன்’ ’விஸ்வரூபம் 2’ ’மீன் குழம்பும் மண்பானையும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கமல்ஹாசன் உடன் அவர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூஜா குமாருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவ்வப்போது அவர் தனது திரைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார். 



அந்த வகையில் கமல்ஹாசன் உடன் அவர் நடித்த ’உத்தம வில்லன்’ திரைப்படத்தில் கதகளி ஆட்டம் ஆடும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவருக்கு கதகளி டான்சர் ஒருவர் வெள்ளை துணியை இடுப்பில் சுற்றி அதன் பின் மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷனாக ’கதகளி கலைஞர் ஒருவர் தனக்கு மேக்கப் செய்ததாகவும், இந்த டான்ஸ் எனக்கு மிகவும் பிடித்த டான்ஸ் என்றும் ’உத்தமவில்லன்’ படத்தில் நான் மிகவும் அனுபவித்து இந்த டான்ஸ் ஆடினேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

’உத்தம வில்லன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை பூஜா குமார் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement