• Dec 04 2024

இருவரதும் மிகவும் ஆழமான நட்பு அது..!ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பகிர்வு..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் இயக்கிய "லால் சலாம்" திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.தற்போது இவரது விவாகரத்து விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய நேர்காணலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவையின் உறுப்பினருமான கனிமொழியுடனான 20 ஆண்டுகள் நீண்ட நட்பை பற்றிய பாசமிகு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


குறித்த நேர்காணலில் "நான் பொதுவாக எந்த இடத்திற்கும் செல்ல மாட்டேன். ஆனால், கனிமொழி அக்கா எதற்காக அழைத்தாலும் நான் எங்கு வேண்டுமானாலும் சென்று விடுவேன். எங்கள் உறவை விவரிக்கவே முடியாது. எனக்காக எப்போதும் அவரே முன்னிலையாக நிற்பார். எங்களுக்கு 20 ஆண்டுகள் பழகிய நட்பு இருக்கிறது. நான் சோர்வாக இருக்கும் தருணங்களில், முதல் தொலைபேசி எப்போதும் அக்காவுக்கு தான் மற்றும் அக்கா பார்ப்பதற்கு மிகத் தெளிவான, சீரியஸ் ஆளாக இருக்கலாம். ஆனால், அவர்களின் சிரிப்பு மிகவும் அழகானது. அதே நேரத்தில் அவர்கள் அதிகம் சிரிக்க மாட்டார்கள்! அவர்கள் இன்னும் அதிகமாக சிரிக்க வேண்டும்" என உருக்கமாக கூறி பாசமிகு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement