தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் வந்துள்ளார் இயக்குனர் சிம்பு தேவன்.ஜோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் பத்து பெரும் தங்களை தாங்கள் நிரூபிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழில் கடலில் மொத்த படப்பிடிப்பையும் நிகழ்த்தியிருக்கும் முதலாவது படமான "போட்" பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையயில் இயக்குனர் சிம்புதேவன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னைக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட சென்னையின் பூர்வ குடிகளுக்காக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் ‘போட்’ படம் பார்த்துள்ளனர்.அவர்களின் ‘போட்’ படம் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் உள்ளடக்கிய இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#Boat சென்னைக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட சென்னையின் பூர்வ குடிகளுக்காக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் ‘போட்’ படம் பார்த்தனர். அவர்களின் ஈரமான உணர்வுகள்…@iyogibabu @maaliandmaanvi @cde_off @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy @saregamasouth pic.twitter.com/YTYG1SjVqn
Listen News!