"லக்கி பாஸ்கர்" திரைப்படம் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு போட்டியாக அமரன், பிரதர்,bloody beggar போன்ற திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. இதனிடையே லக்கி பாஸ்கர் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.
பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல் முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது. அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
துல்கர் சல்மான் சிறப்பாக நடித்துள்ளார் படத்தின் பெரும்பாலான வசனங்கள் கைத்தட்டலை பெறுகின்றன. மீனாட்சி சௌத்ரி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம்கியும், சாய்குமாரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் வலுசேர்த்துள்ளனர்.
d_i_a
பேங்க்கில் மோசடி, ஸ்டாக் மார்க்கெட் போன்ற காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கின்றன. துல்கர் சல்மான் போடும் திட்டங்கள், அவை வெளிப்படும் விதம் எல்லாமே நம்மை ஈர்க்கின்றன.மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக பார்த்து ரசிக்கலாம்.
Listen News!