• Aug 25 2026

அர்ஜுன் தாஸுக்கு இது பெரிய ரிஸ்க்கா? ‘கான் சிட்டி’ டிரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் பகிர்வு

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பல வெற்றிப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தில் கதாநாயகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், படம் வருகின்ற ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம், அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement