• Apr 26 2024

மக்கு மணிக்கு தாறுமாறாக முட்டுக் கொடுத்த அசீம்... வைச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது இதுவரை 82 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது. அதாவது 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், தற்போது 9 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் எஞ்சி இருக்கின்றனர். மேலும் இந்த வாரத்தின் அனைத்து டாஸ்க்குகளும் நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டன. 

அந்தவகையில் முதல் மூன்று நாட்கள் பிரீஸ் - ரிலீஸ் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கின் நடுவே போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் என்ட்ரி கொடுத்து சர்ப்ரைஸ் செய்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும், நான் ஏன் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை விட பெஸ்ட் என விளக்கம் கொடுக்க வேண்டும். 

அதேபோல் தன்னுடன் இவரும் பைனலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாளரின் பெயரையும் காரணத்துடன் குறிப்பிட வேண்டும். இந்த டாஸ்க்கில் அமுதவாணன், ஏடிகே, விக்ரமன், ரச்சிதா, ஷிவின் ஆகியோர் நியாயமான கருத்துகளை முன்வைத்து அட்டகாசமாக விளையாடினர். 


அதே சமயத்தில் மணிகண்டனின் கருத்துகள் கேட்கவே காமெடியாக இருந்தது, அத்தோடு அதற்கு அசீம் முட்டுக் கொடுத்தது இன்னும் வேடிக்கையாகிப் போனது. அந்தவகையில் தான் ஏன் மற்ற போட்டியாளர்களுடன் பெஸ்ட் என்ற விளக்கம் சொன்ன மணி, விக்ரமன் பெண்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தார், அவர் கண்களுக்கு ஆண்கள் பிரச்சினை தெரியவில்லை என்றார். 

அதேபோல் நான் தான் மற்ற போட்டியாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஆதரவாக நின்று பேசியதாக செம்ம உருட்டு உருட்டினார். இதில் மிகப்பெரிய கொடுமையே அசீம் இதனை ஆதரித்து மணிகண்டனுக்கு ஆமாம் சாமி போட்டது தான். அதேபோல், பைனலில் தன்னுடன் இவர் தான் வருவார் என மணிகண்டன் அசீமையும், அசீம் மணிகண்டனையும் மாறி மாறி கூறிக் கொண்டதையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் 'மக்கு மணி' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அத்தோடு மணி குறித்து டிவிட்டரில் விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள், இந்த சீசனின் மிகப் பெரிய வன்ம குடோன் மணி தான். இத்தனை நாளும் அசீம்க்கு சொம்படிச்சே பிக்பாஸ் வீட்டில் இருந்துவிட்டான். அதேமாதிரி அசீம்க்கு நான் மிகப் பெரிய ஃபேன் என மணிகண்டன் சொன்னதையும் நெட்டிசன்கள் செம்மையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 


அதுமட்டுமல்லாது அசீமும் தனது சுயநலத்துக்காக மணிகண்டனை பக்க வாத்தியமாக பயன்படுத்திக் கொண்டதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முக்கியமாக பைனலுக்கு மணிகண்டன் வருவார் என அசீம் சொன்னது, கடுமையாக ட்ரோலாகி வருகிறது. இவ்வாறாக மணிகண்டன் பைனலுக்கு வருவார் என அசீம் நம்பிக்கையோடு இருக்க, இந்த வாரம் அதே மணிகண்டன் தான் எவிக்சன் என்ற செய்தியும் தற்போது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement