• Jan 19 2025

நம்மள எல்லாம் லூசுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்களா? ‘சிறகடிக்க ஆசை’ இயக்குனரை கழுவி ஊற்றும் ரசிகர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கதை சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்து பார்த்த ரசிகர்கள் தற்போது ’சிறகடிக்க ஆசை’ இயக்குனரை கலாய்க்க ஆரம்பித்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே நேற்று போலீஸ் ஸ்டேஷனில் 30 லட்சம் ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது என்பதும் ஒரு வாடிக்கையாளருக்கு அப்படி முப்பது லட்சம் ரூபாய் எல்லாம் ஆன்லைனில் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியாது என்பதெல்லாம் இயக்குனருக்கு தெரியாதா என்று விமர்சனம் வந்தது. 

 இந்த நிலையில் இன்று ’15 லட்ச ரூபாயை மாமா வரும்போதே கொண்டு வந்திருக்கலாமே’ என்று முத்து கேட்டபோது, அதற்கு ரோஹிணி ‘பிளைட்ல எல்லாம் அவ்வளவு பணம் கொண்டுவர முடியாது’ என்று கூறுகிறார். ‘பிளைட்ல ஒழுங்காக கணக்கு வைத்திருந்தால் எத்தனை கோடி வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்பது இயக்குனருக்கு தெரியாதா? பிளைட்டில் அவ்வளவு பணம் கொண்டு வர முடியாத போது மொபைல் டிரான்ஸ்பர் மட்டும் எப்படி செய்ய முடியும்? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் கதை நகர்த்தி கொண்டு செல்கிறார், நம்மளை எல்லாம் லூசு என்று நினைத்து விட்டாரா’ என்று விமர்சனங்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன. 



கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னால் முன்பு எப்படி காட்சிகளை அமைத்தாலும் ரசிகர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள், ஆனால் சமூக வலைத்தளம்  ஒன்று வந்த பின்னர் ஒவ்வொரு காட்சியையும் கவனமாக ரசிகர்கள் பார்த்து அதை கேள்வி கேட்டு வருகிறார்கள் என்பதும் சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் என்பதால் கதை எழுதுபவர்கள் மற்றும் இயக்குனர்கள் மிகவும் கவனமாக எழுத வேண்டும் என்று சிறகடிக்க ஆசை இயக்குனருக்கு அறிவுரை கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சீரியல் போகும் போக்கு குறித்து இன்னொரு ரசிகர் கூறியபோது, ‘நம்ப என்னைக்கு இந்த சீரியல் பார்க்க ஆரம்மித்தோமோ அன்றே நம் அனைவரும் பைத்தியம் ஆகிவிட்டோம் ,  முத்து மீனா என்ற ஜோடிக்காக பார்க்குறோம், ஆனால் இந்த நாதாரிங்க இப்படி எல்லாம் நம்பள வச்சு செய்றானுங்க’ என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement