• Jun 05 2026

வயசு ஏற கவர்ச்சி கூடுதே! நயன்தாராவின் புதிய லுக்கிற்கு ஹார்டின்களை குவிக்கும் நெட்டிசன்கள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு பேரரசை உருவாக்கியுள்ள நடிகை நயன்தாரா, இன்று வரை ரசிகர்களின் மனதில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். வயது அதிகரித்தாலும், அவரது மார்க்கெட்டும், ரசிகர் ஆதரவும் சற்றும் குறையாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. 

குறிப்பாக பல முன்னணி நடிகர்கள் கூட அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவிப்பது, அவரின் ஸ்டார் மதிப்பை வெளிப்படுத்துகிறது.


சமீபகாலமாக கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை கவரும் விதமாக ஸ்டைலிஷ் போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் அவர் எடுத்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. எளிமையான மேக்கப், ஸ்டைலான லுக் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்கு ரசிகர்கள் “வயசு ஏற ஏற இன்னும் அழகு கூடுதலாகுது..” என கமெண்ட்ஸ் செய்து வருவதுடன், இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement