சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக தனது
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில்
நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில் ’ஜெயிலர்’
படத்தில் மட்டும் அவரை எப்படி நடிக்க
வைத்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்
அளித்த பதில் இதுவரை தெரியாத தகவலாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்
தயாரிப்பில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி
ரூபாய்க்கு மேல் வசூல் செய்து
சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெல்சன் இடம் தொகுப்பாளர் பாலா
கடந்த சில ஆண்டுகளாகவே தலைவர்
அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில்
நடிப்பதில்லை, ஆனால் நீங்கள் எப்படி அவரை சமரசம் செய்து
நடிக்க வைத்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் ’காட்சிக்கு மிகவும் அவசியம் என்றால் நான் புகைபிடித்து நடிக்கிறேன்
என்று கூறியதாகவும் தேவை இல்லாமல் ஸ்டைலுக்கு
நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் இதையடுத்து தான் கிளைமாக்ஸில் இந்த
காட்சியின் முக்கியத்துவத்தை கூறி சுருட்டு பிடிக்க
சொன்னபோது அவர் ஒப்புக் கொண்டு
நடித்ததாகவும் கூறினார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடித்த
மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் புகை பிடிக்கும் காட்சிகளில்
நடித்ததை போட்டு காட்டி தான் அவரை சமரசம்
செய்ததாகவும் அதை பார்த்தபின் இந்த
காட்சிக்கு புகை பிடித்தால் நன்றாக
இருக்கும் என்று அவரே முடிவு செய்து
நடித்ததாகவும் கூறினார்.
’ஜெயிலர்’ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இதுதான், தலைவரோட ஸ்டைல் மிகவும் சூப்பராக இருக்கும், இந்த புகைப்படத்தை நான்
எனது மொபைலில் வைத்து அடிக்கடி பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
Listen News!