• Nov 22 2024

முதல் முறையாக நீச்சல் உடையில் நஸ்ரியா.. கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் கழித்து இதெல்லாம் தேவையா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை நஸ்ரியா நசீம் திரைப்படங்களில் நடிக்கும் போது கூட கிளாமராக நடித்ததில்லை என்ற நிலையில் திருமணம் ஆகி இத்தனை வருடங்களான நிலையில் திடீரென நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நஸ்ரியா நசீம் என்பதும் தமிழில் அவர் ’நேரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’ராஜா ராணி’ ’நய்யாண்டி’ ’வாயை மூடி பேசவும்’ ’திருமணம் எனும் நிக்கா’ போன்ற படங்களில் நடித்தார்

இந்த நிலையில் தான் திடீரென அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் ஆகி இந்த தம்பதிகளுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியாவுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இருப்பினும் அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்யாமல் தன்னுடைய கணவர் நடிக்கும் படங்கள் தன்னுடைய தோழிகளுடன் இருக்கும் படங்கள் உள்ளிட்டவை மட்டுமே பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’ச்சில் பேபி’ என்று கேப்ஷனாக கொடுத்த நிலையில் இந்த பதிவுக்கு சுமார் 4 லட்சத்துக்கு மேல் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து நீச்சல் உடை தேவையா போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement