விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியலாக சிறகடிக்க ஆசை காணப்படுகிறது.
சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் 1000 எபிசோடுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து, இதில் நடித்துள்ள பிரபலங்கள் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான புதிய கதைக்களம் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதன்படி, ஏற்கனவே விஜயாவின் வீட்டை ஜப்தி செய்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு இடமாக செல்கின்றனர். அண்ணாமலை, மீனா, முத்து ஆகியோர் மீனாவின் அம்மாவின் வீட்டில் தங்குகின்றனர். ஸ்ருதி வீட்டிற்கு விஜயா செல்கிறார். வேறு வழியில்லாமல் மனோஜ் ஸ்டோர் ரூமில் தங்குகிறார்.

இவ்வாறான நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் ஸ்ருதி வீட்டில் தங்கி உள்ள விஜயா கோபத்தில் பொங்கி எழுகிறார். அதாவது, ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் தங்களுடைய நண்பர்களுடன் குடித்து கும்மாளம் அடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஜயா கோபப்படுகிறார்.
மேலும், “இந்த மாதிரி நடு வீட்டில் குடிக்கிறவர்கள் வீட்டில் நான் இருக்கணுமா? வேறு வழியில்லாமல் வந்துட்டேன், கிளம்புறேன்” என்று கூறி அங்கிருந்து வெளியேறுகிறார்.
அதற்கு பிறகு நேராக மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு சென்று, “வீடா அது? குடியும் கூத்துமா?” என புலம்புகிறார். மேலும், “நான் இங்கேயே இருக்கிறேன்” என்று கூறுகிறார்.
இறுதியில் முத்து, மீனா மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனோஜின் ஸ்டோர் ரூமுக்கு வந்து விஜயாவை மீனாவின் வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றனர். மேலும், “உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ அதை நான் செய்து தருகிறேன்” என்று மீனா விஜயாவிடம் கூறுகிறார். இதுதான் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ.
எனவே, தற்போது கதி கலங்கி நிற்கும் விஜயா மனது மாறி மீனாவின் வீட்டிற்கு செல்வாரா? அல்லது பிடிவாதமாக மனோஜின் ஸ்டோர் ரூமிலேயே தங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!