தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது அரசியல் களத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றியுடன், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி பெரும்பான்மையை எட்டியது. இதன் பின்னர், தவெக தலைவர் விஜய் ஆளுநரை நான்காவது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியல் தலைவர்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றது.
பதவியேற்ற உடனே, முதலமைச்சர் விஜய் முக்கிய அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதன்மையானதாக, இரண்டு மாதங்களுக்கு மாதம் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த முதல் நடவடிக்கையே புதிய அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!