• May 10 2026

சினிமாவில் பல கோடிகள் வாங்கிய விஜய்... முதல்வராக கிடைக்கும் சம்பளம் எவ்வளவு.?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜயின் சம்பளம் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்த விஜய், ஒரு திரைப்படத்திற்கே கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றவர். ஆனால் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அரசின் விதிகளின்படி அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாத சம்பளமாக சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அடிப்படை சம்பளம் மட்டுமின்றி பல்வேறு அலவன்ஸ்களும் அடங்கும்.


அதேவேளை, முதலமைச்சருக்கான பல்வேறு சிறப்பு வசதிகளையும் தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும். அதன்படி, அரசு இல்லம், பாதுகாப்பு வசதிகள், புல்லட் ப்ரூப் கார்கள், தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் அரசின் செலவில் வழங்கப்படும்.

மேலும், முதலமைச்சருக்காக அரசு சார்பில் ஒரு அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்படும். அந்த இல்லத்தின் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

அத்துடன், முதலமைச்சரின் பயணத்திற்காக மூன்று அரசு வாகனங்கள், சாரதிகளின் சம்பளம் மற்றும் மாதாந்திர எரிபொருள் செலவுகளும் அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாநில அரசு சார்பில் உயர் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், தேவைக்கேற்ப மத்திய அரசின் பாதுகாப்பும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement