• May 30 2026

இனி ஹாரன் சத்தத்திற்கு பதிலா விசில் சத்தம் தான்.. மாஸ் காட்டும் கூலு ஸ்கூட்டி.!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்பட்டாலும், தனித்துவமான பேச்சு பாணியால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் கூல் சுரேஷ். காமெடி மட்டுமில்லாமல் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூல் சுரேஷ், அங்கு காட்டிய இயல்பான பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பெரும் மக்கள் கவனத்தை ஈர்த்தார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரை அறியாதவர்களும் பின்னர் அவரது தீவிர ரசிகர்களாக மாறினர்.

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், சிம்பு படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளில் கொடுக்கும் வித்தியாசமான ரியாக்ஷன்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அந்த காட்சிகளைக் காண்பவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது என்பதே உண்மை.


காமெடி கலந்த தெளிவான கருத்துகளை பகிரும் கூல் சுரேஷ், அரசியல் மற்றும் சமூக விஷயங்களிலும் தன் பார்வையை தைரியமாக வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மீதும் விஜய் மீதும் அவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க விசில் வைத்து தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டி ஒன்றை கூல் சுரேஷ் வாங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான காணொளியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கூல் சுரேஷ் வாங்கிய வண்டியில் விஜயின் கட்சிக்கொடியின் நிறங்கள் காணப்படுவதோடு அதில் "தற்குறி இல்லடா தமிழக மக்களின் அதிபதிடா — TVK " என வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது அவருடைய ஸ்கூட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement