தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மீண்டும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக அரங்கில் மேடை அமைத்தல், இருக்கைகள் வைப்பது, பின்னர் அவற்றை அகற்றுவது என மாற்றி மாற்றி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், ஆளுநரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு திருப்பங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததையடுத்து, விஜய் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகாததால், அரசியல் சூழல் தொடர்ந்து குழப்பமாகவே காணப்பட்டது. இறுதியில் 120 பெரும்பான்மையுடன் விஜய் கட்சி அமைத்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வராக இன்றைய தினம் விஜய் பதவி ஏற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Listen News!