• Jul 14 2026

வெள்ளை சட்டை.. கருப்பு பேண்ட்.. விஜயின் Entryக்கு பின்னால் மறைந்திருக்கும் Plan இதுதான்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து Formal Look-ல் விஜய் வந்திறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எளிமையான ஆனால் ஸ்டைலிஷான அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் “முதல்வர் லுக் செம்ம மாஸ்” என்று கமெண்ட்ஸ் மூலம் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். 

அதேநேரத்தில், விஜய்யின் இந்த புதிய அரசியல் பயணம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement